கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
கோயம்புத்தூர் புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
மாணவர்களின் மத்தியில் போதைப் புழக்கம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் சோதனை நடத்திய நிலையில் சிலரது அறைகளில் உயர் ரக போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த அதிரடி சோதனை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மத்தியில் அதிகளவில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகம் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது என்றும் மக்கள் தெரிவித்தனர்.