பண்ருட்டி: தரமற்று கட்டப்பட்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை பயன்படுத்த முடியாமல் 4 ஆண்டுகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்குசெட்டிபாளையம் பகுதியில் ஆதிதிராவிடர் மக்களுக்காக 8 லட்சம் ரூபாயில் புதிதாகக் கட்டப்பட்டது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி.
இது தரமின்றி கட்டப்பட்டதாக கூறும் பொதுமக்கள், இதனால், 4 ஆண்டுகளாக அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொட்டியில் ஏற்றப்படும் தண்ணீர் முழுவதும், அடுத்த நொடியே கசிந்து வெளியேறிவிடுகிறதாம்.
30 ஆண்டுகள் பழமையான இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.