சென்னை: தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
பேரிடர்களைக் கையாள்வதற்கான நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பேரிடர்களைக் கையாள்வதற்கான நிலையான வழிகாட்டுதல்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. கனமழை முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.