சென்னை: பூண்டை தினசரி பயன்படுத்தி வந்தால், சளி ஏற்படும் எண்ணிக்கைகள் குறைந்துவிடும். அதிலுள்ள பக்டீரியா எதிர்ப்பி குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்த உதவும். மேற்பகுதி சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும். ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும்.
பொதுவாக தினமும் 1-2 பற்கள் பூண்டை பச்சையாக உட்கொண்டு, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிக்க பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். காலையில் எழுந்ததும் தினமும் 1-2 பற்கள் பூண்டை பச்சையாக உட்கொண்டு வர தொப்பை மட்டுமின்றி, நீரிழிவு தடுக்கப்படும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.
அடுத்து ஆப்பிளை நறுக்கி துண்டுகளாக்கி கொள்வோம் , அத்துடன் பட்டைத் தூளை தூவி தினமும் பசிக்கும் போது உட்கொண்டு வரலாம் , இதனால் பசி அடங்குவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து அதிகப்படியான கலோரிகளும் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும் .
அடுத்து 2 லிட்டர் சுடுநீரில் 1 எலுமிச்சையை பிழிந்து, 1/2 கப் புதினாவை நறுக்கிப் போட்டு, ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து கொள்வோம். .மேற்கூறிய கலவையை தினமும் உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடத்திற்கு முன் 1 கப் குடித்து வர வேண்டும்.
இந்த கலவையை சாப்பிடுவதால் குறைவான அளவில் உணவை உட்கொள்ளலாம், இந்த கலவையை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குறைந்து தொப்பையும் குறையும்.
அடுத்து 2 டேபிள் ஸ்புன் கடுகு எண்ணெய்யுடன், 2 டேபிள் ஸ்புன் நல்லெண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்வோம். இந்த கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சுடேற்றி, தொப்பையை தினமும் 3 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும்.
இந்த கடுகு எண்ணெயால் வயிற்றில் உள்ள கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு, தொப்பை வேகமாக குறையும்.