சென்னை: கடற்கரை – தாம்பரம் இடையே நேற்று காலை முதல் மாலை வரை இயக்கப்பட்ட மின்சார ரயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மாற்றாக, சிறப்பு ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் நிலையம் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவை அவ்வப்போது ரத்து செய்யப்படுகிறது.
அந்த வகையில் நேற்று தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி நடந்தது. இதன் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்பட்டன. சென்னை கடற்கரை – பல்லாவரம், பல்லாவரம் – சென்னை கடற்கரை இடையே 45 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
இதேபோல், சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ஆகிய ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்படாமல் திட்டமிட்டபடி இயக்கப்பட்டன. நேற்று விடுமுறை தினம் என்பதால், காலை முதலே ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
தாம்பரம் கடற்கரைக்கு பேருந்தில் செல்ல, நேரமும், பணமும் செலவழித்ததால், ரயிலுக்காக காத்திருந்து பயணித்தனர். தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் என்ற அடிப்படையில் இயக்கப்படுகிறது. இதில் நிற்பதற்கு இடமில்லாமல் பரிதாபமாக பயணம் செய்தனர். ரயில்கள் ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து பல்லாவரம், தியாகராயநகர், பிராட்வேக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பேருந்து நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது.