பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஒரு விவசாயி அரிய நட்சத்திர ஆமையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் அருகே பச்சமுத்துவின் மகன் ரமேஷ் (38) என்பவருக்கு விவசாய நிலம் உள்ளது.
இன்று காலை, ரமேஷ் அவர்களின் வயலில் நடப்பட்டிருந்த சின்ன வெங்காய வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு அரிய நட்சத்திர ஆமை ஊர்ந்து சென்றது. இதைப் பார்த்த விவசாயி அதைப் பிடித்து பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனக்காவலர் மணிகண்டன், நட்சத்திர ஆமையை மீட்டு காப்புக் காட்டில் விட்டார்.