சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். சென்னையில் இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கேரள மாநிலம் வயநாட்டில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 167 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த இயற்கை சீற்றத்தால் வயநாடு மக்கள் பேரிடரை எதிர்கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவித்துள்ளன. இந்தப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இரு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு மற்றும் கேரள மாநில அரசுக்கு ரூ.5 கோடி வழங்கியுள்ளதை வரவேற்கிறேன். இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில் நடந்த துயரச் சம்பவத்தை தேசிய பேரிடராக கருதி, அதற்கு மத்திய அரசு உரிய நிதியுதவி அளித்து, இந்திய ராணுவத்தின் ஆதரவுடன், தேவையான நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி காசோலையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழங்கவுள்ளார். நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஊட்டி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினருமான ஆர்.கணேஷ் ஏற்பாட்டில் கடலூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 80 காங்கிரஸ் பிரமுகர்கள் கொண்ட மீட்பு குழு வயநாடு மாவட்டம் அருகே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உள்ளது. செல்வப்பெருந்தகை கூறினார்.