சென்னை: நேற்று காலை பெங்களூருவில் மோசமான வானிலை காரணமாக டெல்லி, மும்பை மற்றும் அபுதாபியில் இருந்து வந்த 4 விமானங்கள் பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால் பயணிகள் அங்கிருந்து செல்லாமல் விமானத்தில் அமர்ந்தனர்.
காலை 9 மணிக்குப் பிறகு, வானிலை சீரானதும், டெல்லி ஸ்பைஸ் ஜெட் விமானம், மும்பை ஆகாஷா விமானம் மற்றும் மற்றொரு மும்பை ஏர் இந்தியா விமானம் ஆகிய 3 விமானங்கள் பெங்களூருக்குத் திரும்பின. ஆனால் அபுதாபியில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானி தனது பணி நேரம் முடிந்து ஓய்வு பெற்றுவிட்டதாக கூறினார்.
பெங்களூரில் வானிலை சீரான பிறகும், அபுதாபி விமானம் பெங்களூருக்கு திரும்ப முடியவில்லை. இதனால் அந்த விமானத்தில் இருந்த 168 பயணிகள் பல மணி நேரம் அவதிப்பட்டனர். அதன்பின், பயணிகள் போராட்டம் நடத்தியதையடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று, 168 பயணிகளை, விமானத்தில் இருந்து இறக்கி, சுங்கச் சோதனை, குடியுரிமை சோதனை போன்றவற்றை மேற்கொண்டனர்.
அதன் பிறகு சென்னை மாநகரில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பயணிகள் பெங்களூருக்கு செல்லும் பிற விமானங்களில் பெங்களூருவுக்கு அனுப்பப்படுவார்கள் அல்லது விமானி விடுப்பு முடிந்து திரும்பிய பிறகு அனுப்பப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.