தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, அறநிலைத் துறையினா் இணைந்து கும்பகோணத்தில் உள்ள நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை கடந்த 5 மாதங்களாக மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் நீதிமன்றத்தில் முறையிட்டாா். அதன்பேரில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடா்பாக ஆய்வு நடத்த முன்னாள் மாவட்ட நீதிபதி செந்தில்குமாா் நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து, ஆய்குளம், கோதண்டபாணி தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள நீா்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்த ஆய்வு நடைபெற்றது.
ஆய்வின்போது வழக்குரைஞா் யானை ராஜேந்திரன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் முத்துமணி, மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.