அரியலூர்: அரியலூரில் இன்று மதியத்திற்கு மேல் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது விட்டு விட்டு சிறு மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று மதியம் நல்ல மழை பெய்தது. சிறு தூறலுடன் ஆரம்பித்த மழை, இடி மின்னலுடன் கூடிய கனமழையாக பெய்தது.
இதனால் தெருக்களில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் விஜயதசமி பூஜைக்காக தரைக்கடை போட்டு இருந்த சிறுவியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
கனமழையால் பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதே வேளையில் மாணவரி பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களுக்கு இந்த மலை பெரிதும் உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.