சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜி மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவருக்கு ஈசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜி தரப்பில் இருந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.