சென்னை: சென்னையில் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், சென்னை முகப்பேர் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் விடப்படுகிறது. பகல் நேரத்திலேயே இது நடக்கிறது. இதற்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளது.
இதனால் கூவம் ஆறு கடுமையாக மாசடைந்து பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. சென்னை நதி மறு சீரமைப்பு அறக்கட்டளை, பல நுாறு கோடி ரூபாய் செலவில் கூவம் ஆற்றை துாய்மைப்படுத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதில்லை என, நாளிதழ்களில் செய்தி வெளியானது.
இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், ‘டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீர், முகப்பேர் பாலத்திலிருந்து பகல் நேரத்திலேயே கூவம் ஆற்றில் விடப்படுவது குறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர்.
சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர், சென்னை கலெக்டர் ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசு ஆவணங்களின் அடிப்படையில், இந்த அறிக்கை இருக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஆக. , 30ல் நடக்கும்’ என உத்தரவிட்டனர்.