By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!
    1 Min Read
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பண்ணாரி அருகே வாகனங்களை துரத்திய ஒற்றை யானை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பண்ணாரி அருகே வாகனங்களை துரத்திய ஒற்றை யானை
தமிழகம்

பண்ணாரி அருகே வாகனங்களை துரத்திய ஒற்றை யானை

Nagaraj
Last updated: July 5, 2025 3:50 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

பண்ணாரி: பண்ணாரி அருகே இரவில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஒற்றை யானை துரத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தமிழகம்-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சாலையின் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. சமீபகாலமாக பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு பண்ணாரி அடுத்த சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை நெடுஞ்சாலையில் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. அந்த வாகன ஓட்டி ஹாரனை அடித்ததால் திடீரென ஆவேசம் அடைந்த அந்த ஒற்றை யானை அந்த காரை துரத்த தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாகன ஓட்டி காரை பின்னோக்கி வேகமாக இயக்கினார்.

சிறிது தூரம் அந்த காரை விரட்டி சென்ற அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகன ஓட்டி அங்கிருந்து சென்றார். யானை காரை துரத்தும் காட்சியை இந்த வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகிறது. சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது. இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

You Might Also Like

தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!

பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?

விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்

தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்

TAGGED:Bannariforest departmentmotoristsnational highwaysingle elephantWarningஎச்சரிக்கைஒற்றை யானைதேசிய நெடுஞ்சாலைபண்ணாரிவனத்துறைவாகன ஓட்டிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?