தஞ்சாவூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை மாவட்ட கோயில்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று காலை நடை திறக்கப்பட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து மாலை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் கடந்த வாரத்தில் குடும்பத்தோடு தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று காலை முதல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாதவாறு போலீசார் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.