வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு தமிழ்நாடு நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பங்களாதேஷில் தற்போது நிலவும் பதற்றமான சூழல் காரணமாக சில தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாமல் அங்கு சிக்கித் தவிப்பதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் உள்ள இந்திய தூதரகம், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உள்ளூர் பயணங்களை தவிர்க்கவும், குடியிருப்பு வளாகத்திற்கு வெளியே அவர்களின் நடமாட்டத்தை குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு தமிழ்நாடு நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில், தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு இயக்குனரகம், அங்குள்ள இந்திய தூதரகத்தையும், தமிழ் அமைப்புகளையும் தொடர்பு கொண்டுள்ளது.இந்தியாவிற்குள் -+91 1800 309 3793, சர்வதேசம் – +91 80 6900 9900 -+91 80 6900 9901