திருப்பத்தூர்: பைக்குகளைத் திருடி பாகங்களைப் பிரித்து விற்பனை செய்ததாக பாலிடெக்னிக் மெக்கானிக்கல் மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் பைக்குகளைத் திருடி, அவற்றின் பாகங்களைப் பிரித்து வேறு வண்டிகளுக்குப் பொருத்தி விற்பனை செய்து வந்த பாலிடெக்னிக் மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குள்ளனூரில் நடந்த திருவிழாவில் ஒரு பைக்கைத் திருடிச் சென்ற மாணவர்கள், சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் ோலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த மாணவர்கள் மேற்கண்ட பகுதிகளை தவிர வேறு மாவட்டங்களில் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.