செனனை: சென்னை விமான நிலயத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ் அனைவர் மத்தியிலும் பீதியை கிளப்பியது. தொடர்ந்து மோப்ப நாய்களை வைத்து போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக பயணிகள் வந்து சென்று கொண்டிருந்த நிலையில் டிராலியில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் நீண்டநேரமாக கேட்பாரற்று இருந்துள்ளது.
இதனால் சந்தேகமெழுந்த நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதனை மோப்ப நாய் உதவியுடன் பரிசோதனை செய்தனர். ஆனால் அதில் ஆபத்தான பொருள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தால் விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சூட்கேஸ் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.