புது டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரியும் ஒய். பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓஹா மற்றும் கே. வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி கே. வி. விஸ்வநாதன் ஒரு தகவலை வழங்கினார். அதில், “நான் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றியபோது, இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு ஆதரவாக ஆஜராகி வாதங்களை முன்வைத்தேன். எனவே, இந்த வழக்கை விசாரிப்பது எனக்கு முறையாக இருக்காது.
எனவே, விசாரணையில் இருந்து நான் விலகுகிறேன். அதே நேரத்தில், இந்த வழக்கை வேறு புதிய அமர்வில் பட்டியலிடப்பட்டு விசாரிக்கவும் பரிந்துரைக்கிறேன்.” இதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.