தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் 5 மண்டலங்கள் மற்றும் 70 வார்டுகள் உள்ளன. இங்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்களுக்காக சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பாலாறு, செம்பரம்பாக்கம் ஏரி, நெம்மேலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் போன்றவற்றின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
சுமார் 215 மில்லி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் தாம்பரம் மாநகராட்சிக்கு 73 மில்லி லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால் வார்டு வாரியாக 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது தவிர சில பகுதிகளில் லாரிகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீரை நகராட்சி அதிகாரிகள் முறையாக சோதனை செய்து அதன் பின்னரே பொதுமக்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.
தற்போது குளிர் காலம் துவங்கி, மழைக்காலம் துவங்கியுள்ளதால், தடுப்பு நடவடிக்கையாக, நகராட்சி அதிகாரிகள், குளோரின் அளவு சரிவர உள்ளதா என, உறுதி செய்த பிறகே, வீடுகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். தற்போது, ஒவ்வொரு வார்டிலும் சுமார் 1 லட்சம் முதல் 3 லட்சம் கொள்ளளவு கொண்ட சுமார் 86 மேல்நிலை நீர்த்தேக்கங்களும், 32 கீழ்நிலை நீர்த்தேக்கங்களும் உள்ளன. மாநகராட்சியில் மொத்தம், 1 லட்சத்து, 84 ஆயிரத்து, 547 குடிநீர் இணைப்புகள் உள்ளன.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளை வாரம் இருமுறை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கி வருகிறது. தாம்பரம் பேரூராட்சி 2-வது மண்டல உதவி பொறியாளர் சங்கர் கூறுகையில், “கீழ் நீர்த்தேக்க தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள குடிநீரை பரிசோதனை செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பி ஒவ்வொரு முறையும் தண்ணீரை பரிசோதித்து அதன் பின்னரே வினியோகம் செய்வோம்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கீழே செல்லும் இடத்தில் தண்ணீரை மீண்டும் சோதித்து அதில் குளோரின் அளவு குறைந்தது 2 பிபிஎம் உள்ளதா என சரிபார்ப்போம். தற்போது குளிர் காலம் துவங்கியுள்ளதால், 5 பிபிஎம், 7 பிபிஎம் வரை பார்ப்போம். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2 பிபிஎம் வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
அதிகபட்சம் 3 ppm போடுவோம். மழைக்காலம் என்பதால் சில பகுதிகளில் டெங்கு போன்ற சில பிரச்னைகள் ஏற்படும். அதற்காக குளோரின் அளவை 3 பிபிஎம் வரை அதிகரிக்கிறோம். ஒவ்வொரு 3 நாட்களுக்கும் நாங்கள் தண்ணீர் விநியோகிக்கிறோம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியிலும் சோதனை செய்வோம், மேலும் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு இடங்களில் சோதனை செய்யப்படும்.
கிழக்கு, மேற்கு தாம்பரம், பம்மல், அனகாபுத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பாலாறு மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதேபோல், சிட்லபாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாகவும், பீர்க்கன்காரனை, பெருங்களத்தூர் பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் கிடைத்து வருகிறது.
சில புதிய திட்டங்கள் தயாராகி வருகின்றன. தாம்பரம் மாநகராட்சியில் 95 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மண்டலம் 4 மற்றும் 5க்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே லாரிகள் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. பம்மல், திருநீர்மலை, அனகாபுத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதற்கு முன், குடிநீர் வினியோகத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இப்போது அத்தகைய தாமதம் இல்லை.
3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 215 மில்லி தண்ணீர் கொடுக்க வேண்டும், ஆனால் அந்த அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் 73 மில்லி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில், 500 மி.லி., தண்ணீர் கிடைக்கும் போது, தினமும் தண்ணீர் வழங்கப்படும்,” என்றார்.