சென்னை: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளின் பராமரிப்பு கட்டணத்தை உயர்த்த அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதன்படி, ஏசி இல்லாத தியேட்டர்களுக்கு ரூ.2-ல் இருந்து ரூ.5 ஆகவும், ஏசி தியேட்டர்களுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.10 ஆகவும் கட்டணத்தை உயர்த்த திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ஏசி இல்லாத தியேட்டர்களுக்கு பராமரிப்பு கட்டணம் ரூ.2-ல் இருந்து ரூ.3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஏசி தியேட்டர்களுக்கு பராமரிப்பு கட்டணம் ரூ.4-ல் இருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் தியேட்டர் டிக்கெட் விலையில் மாற்றம் ஏற்படும். திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் இன்று விளக்கமளிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.