சென்னை: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் மலைக்கிராமங்கள் உள்ள மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மழைக்காலங்களில் விழிப்புடன் இருக்குமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், கோவை, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திருப்பூர் ஆகிய மலை மாவட்டங்களை கண்காணிக்க வேண்டும்.
மழைக்காலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை துறை கண்காணிப்புடன் வருவாய் துறையினர் தொடர்பு கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.