நெல்லை: நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
சுமார் 571 மாணவர்களுக்கு நேரடியாக ஆளுநர் பட்டங்களை வழங்கிய நிலையில், விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும் உயர்கல்வி துறை அமைச்சருமான கோவி செழியன் பங்கேற்கவில்லை.