சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, நேற்று அதிகாலை 05.30 மணிக்கு அதே பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து காலை 08.30 மணிக்கு மேலும் வலுவிழந்தது.
இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 30-12-2024 வரை; தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகாலையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 31-12-2024 மற்றும் 01-01-2025: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.