தஞ்சாவூர் : சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் பலரது எதிர்க்கட்சியினரின் சிறுபான்மை மக்களின் வாக்குரிமையை பறிக்கும் நடவடிக்கை ஈடுபடும் மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு தமிழர்களின் வாக்குரிமையை பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கான வாக்குரிமைகளை மாற்றி என் ஆர் சி யை பயன்படுத்த முயற்சி செய்யும் மத்திய அரசையும் இந்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம். கொண்டு தேர்தல் ஆணையத் திட்டம் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.