மாமல்லபுரம்: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக துணைத்தலைவர் கிறிஸ்டோபர் டபிள்யூ. ஹோட்ஜஸ், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே நேற்று மதியம் மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் கடற்கரை கோவிலின் ஐந்து தேர்கள், அர்ஜுனன் தபஸ், வெண்ணெய் உருண்டை உள்ளிட்ட பழங்கால நினைவுச்சின்னங்களை சுற்றி பார்த்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தார்.
முன்னதாக, அவரும் அவரது குடும்பத்தினரும் மாமல்லபுரம் துறைமுக நகரமாக இருந்ததற்கான சான்றாக கடற்கரை கோயில் வளாகத்தின் முன் பகுதியில் உள்ள படகுத்துறை பள்ளங்களையும் பார்வையிட்டனர். அப்போது, கடலில் உப்பும், காற்றும் வீசுவதால், கடற்கரைக் கோயில் எப்படி கெட்டுப் போகாமல், தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற வரலாற்றுத் தகவல்களை சுற்றுலா வழிகாட்டி விரிவாக விளக்கினார். முன்னதாக, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக துணை தூதரகத்தின் வருகையையொட்டி கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை ஆகிய இடங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.