மதுரை: ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் நாளை (ஜூலை 16) விசாரணைக்கு வருகிறது.
நில அபகரிப்பு வழக்கில் 2 முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
ரூர் நகர காவல் நிலையத்தில் போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்த 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது பெயரும் இடம்பெறலாம் என்பதால், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ஜூன் 12ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.
ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் திரு.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி திரு.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் திரு.விஜயபாஸ்கரின் சகோதரர் திரு.சேகர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நாளை (ஜூலை 16) விசாரணை நடத்த உள்ளனர்.