டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்தாமல் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆளுநர் ஆர்.என். ரவியின் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில்; ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு எதிரானவை.
ஆளுநரின் நடவடிக்கைகள், அவர் தமிழக ஆளுநராகச் செயல்பட விரும்பவில்லை என்பதைக் காட்டுகின்றன. ஆளுநர் ஆர்.என். ரவி விளம்பரம் தேடும் நோக்கத்துடன் செயல்படுகிறார். அரசியலமைப்பை மீறியதற்காக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.