டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. இந்த குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரையொட்டி, வரும் 24-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி வரும் 24-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வக்ஃப் சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் குறித்து, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இரு அவைகளிலும், வரும், 25-ம் தேதி முதல், 20-ம் தேதி வரை, குளிர்கால கூட்டத்தொடரை நடத்த, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அரசியலமைப்பின் 75-வது ஆண்டு விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நவம்பர் 26-ம் தேதி கொண்டாடப்படும் என்றும் அவர் கூறினார்.