திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பெரிய அலையில் சிக்கி கவிழ்ந்த நாட்டுப் படகு கவிழ்ந்தது. இதனால் அந்த படகுகில் வந்த மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் அவர்களை சக மீனவர்கள் காப்பாற்றினர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே முதலைப்பொழி கடற்கரையில், நாட்டுப்படகில் பெருமாந்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீன்பிடிக்கப் புறப்பட்டனர்.
அப்போது எழுந்த மிகப்பெரிய அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் 3 பேரில் கடலில் விழுந்தனர். மற்றொரு படகில் வந்த மீனவர்கள், கயிறு வீசி மூன்று பேரையும் காப்பாற்றினர். கடல் அலையில் சிக்கி படகு கவிழும் காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.