சேலம்: ஓடும் ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்த ஆந்திர ஐயப்ப பக்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓடும் ரயிலில் முன்பதிவு பெட்டியில் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்திய ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் மீது சேலம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரயிலில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்ற விதி உள்ள நிலையில் திருப்பதியில் இருந்து சேலம் வழியாக கொல்லம் சென்ற ரயிலில் சிலர் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தி உள்ளனர்.
அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.