சென்னை : தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் 2வது ஷிப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிக அளவில் மாணவர், மாணவிகள் சேர்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாம்.
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதில், 100 இடங்கள் மட்டுமே உள்ள சில படிப்புகளுக்கு 2,000 மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
அதுபோன்ற பாடங்களுக்கு இந்தாண்டு முதல் 15,000 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வகையில், 2ம் ஷிப்ட் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி, ஆசிரியர்களை கூடுதலாக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.