சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:- அரசு மருத்துவமனைகளுக்கு கட்டிடங்கள் கட்டும் திமுக அரசு, அங்கு புதிய மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்களை நியமிக்கவில்லை. வேலூர் நகரில் அமைந்துள்ள பென்லேண்ட் அரசு மருத்துவமனை, ரூ.150 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். இருப்பினும், இந்த மருத்துவமனைக்கு புதிய மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது தொழில்நுட்ப ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த மருத்துவமனை மட்டுமல்ல, சேலம், திருநெல்வேலி, கிண்டி போன்ற புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது பிற ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.

திமுக அரசு அரசு மருத்துவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் பதவி உயர்வு வழங்காமல் புறக்கணிக்கிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அரசு மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசு இதை கண்டுகொள்வதில்லை. மாறாக, போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து வருகிறது.
எனவே, அரசு மருத்துவமனைகளைத் திறக்கும் நேரத்தில் பொருத்தமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களை நியமிக்கவும், மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.