நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த 22-ம் தேதி பலத்த மழை பெய்தது. இதனால் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கடந்த 22-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

நீர்வரத்து அதிகரித்து வருவதால், நேற்று மாலை முதல் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது. இதையடுத்து 4 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.