ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக திகழ்கிறது. இங்கு நிலவும் இதமான வானிலையால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து ரசிக்கின்றனர். இது தவிர வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.
தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.
நேற்று பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் அழகிய வானிலையை கண்டு மகிழ்ந்தனர். தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் விளையாடி மகிழ்ந்தனர். குறிப்பாக, ஊட்டி படகு இல்லத்தில் இருந்து மிதிவண்டி மூலம் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சில சுற்றுலா பயணிகள் பேட்டரியில் இயங்கும் டோனட் படகில் டீ அருந்திய படியே பயணித்து மகிழ்கின்றனர். இதேபோல், ரோஜா பூங்கா, தொட்டபேட்டை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.