சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழகங்களின் மண்டல தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை பல்லவன் சாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். சென்னையில் மினிபஸ்சை அரசு இயக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலர் கே.ஆறுமுகநயினார், பொருளாளர் சசிகுமார், அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலர் வி.தயானந்தம், தலைவர் ஆர்.துரை, பொருளாளர் ஏ.ஆர். பாலாஜி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.