தமிழகத்தில் ஒரு மாதத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக கூறிய டிடிவி தினகரன், ஆளுங்கட்சியினரின் அராஜகத்தால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை சூடுபிடித்துள்ளது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் முகாமிட்டுள்ளனர். தெரு தெருவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சித்து பேசினார். பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால் திமுக அரசுக்கு பாடம் புகட்டுவேன் என்றார்.
ஒரே மாதத்தில் 150 பேர் கொல்லப்பட்டனர்
பிரசாரத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தமிழகம் போதைப்பொருள் சந்தையாக மாறி வருவதாகவும், ஒரு மாதத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக வெளியான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆளுங்கட்சி அராஜகத்தால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. கஞ்சா போன்ற போதைக்கு அடிமையான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி கூலித்தொழிலாளர்களாக மாறுகின்றனர். இந்த திமுக ஆட்சி அனைத்து கட்சிகளையும் ஏமாற்றும் ஆட்சி. எனவே திமுகவை தோற்கடிக்க ஜெயலலிதா ஆதரவாளர்கள் எங்கிருந்தாலும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதிமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம்
மேலும் பேசிய அவர், 1998 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை 30 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்தவர்கள் பாமகவினர். 2001 தேர்தலில் ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க ஆதரித்த ராமதாஸ், 2009-ல் அன்புமணி ராமதாஸ் பதவியை ராஜினாமா செய்து ஜெயலலிதாவை ஆதரித்தார். எனவே ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளும், தொண்டர்களும் எங்கிருந்தாலும் மாம்பழத்திற்கு வாக்களிக்க வேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.