பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை அருகே கொசுவர்த்தி சுருளை சாப்பிட்ட இரட்டைக் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாளையங்கோட்டை அருகே மிட்டாய் என நினைத்து கொசுவர்த்தி சுருளை, இரட்டைக் குழந்தைகள் சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், குழந்தைகளின் தாய் மஞ்சுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சந்திரலிங்கம், சூரியலிங்கம் ஆகிய 2 வயது இரட்டைக் குழந்தைகள் கொசுவர்த்தி சுருளை சாப்பிட்டதாகவும் இரவு 2 பேரையும் மஞ்சு தூங்க வைத்தபோது, அவர்கள் வாயில் நுரை தள்ளி மயக்கம் போட்டதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகள் 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.