சென்னை: தமிழக அரசின் ‘நம்ம சென்னை நம்ம சந்தை’ சந்தை மூலம் செம்மொழி பூங்காவில் பாரம்பரிய பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாரம்பரிய பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சென்னை மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, தமிழக அரசு 2024-ம் ஆண்டு சென்னையில் உள்ள செம்மொழி பூங்கா வளாகத்தில் “நம்ம சென்னை நம்ம சந்தை” என்ற சந்தையைத் தொடங்கியது, தற்போது அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. பாரம்பரிய காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், பழங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இந்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்க்கப்படும் சிறப்பு காய்கறிகள், பழங்கள், மருத்துவ குணங்கள் கொண்ட காய்கறிகள் விவசாயிகளின் வயல்களில் இருந்து வாங்கப்பட்டு, தோட்டக்கலைத் துறையின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த சந்தையில் விற்கப்படுகின்றன.