சென்னை :தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்து உள்ளது. எதற்காக தெரியுங்களா எ
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
புகார் தொடர்பான காவல்துறையின் துரித நடவடிக்கை மற்றும் டிஐஜி அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்தது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு நீதிமன்றம் பாராட்டியுள்ளது. மாணவி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் எனவும் நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இருந்து வந்த இந்த வழக்கில் தமிழக அரசை நீதிமன்றம் பாராட்டியுள்ளது அனைத்து தரப்பினர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.