சென்னை : கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருந்தால் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்தாண்டை போல் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருந்தால் முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளிவைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
இதனால் ஜூன் 2-க்கு பதிலாக 6 (அ) 9-ம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் தங்களின் குழந்தைகளை வெளியூரில் உள்ள உறவினர்கள் வீட்டில் கொண்டு விட்டு வருவது பெற்றோர்களின் வழக்கம்.
இதனால் பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருந்தால் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.