சென்னை : செல்போன் பார்த்துக் கொண்டே சாப்பிடுபவரா நீங்கள்? ஒரு கையில் போனோம் மறு கையில் உணவுமாக இருப்பீங்களா அப்ப இதை படியுங்கள்.
சிலருக்கு டிவி அல்லது ஃபோனை பார்த்துக் கொண்டே சாப்பிட்டால்தான், சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.
இவ்வாறு சாப்பிடுவதால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை உணராமலே பலரும் அளவுக்கு மீறி சாதத்தை உட்கொள்கிறார்களாம். இதனால் சர்க்கரை நோய், அதிக கொழுப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், உடல் பருமன், ஸ்ட்ரெஸ், வாயு பிரச்னை போன்றவையும் ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றனர். அதைவிட முக்கியமான ஒன்று சாப்பிடும் பொழுது டிவி பார்ப்பது போன் பார்ப்பது என்பது கண் பாதுகாப்பை இழக்கும் நிலையை உருவாக்கும். எனவே இதனை தவிர்த்து விட்டு சாப்பிடுவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.