சென்னை: கூகுள் பிக்சல் 9 சீரிஸ் போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Pixel 9 Pro, Pixel 9 Pro XS, Pixel 9 போன்கள் வெளியாகியுள்ளன. இது கூகுள் பிக்சல் 8 மாடலின் அடுத்த பதிப்பாகும்.
இந்த போன்கள் கூகுளின் மேட் பை கூகுள் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பையில் உள்ள கூகுள் பிக்சல் அல்லது நெஸ்ட் சாதனங்களைப் பயன்படுத்தும் பயனர்கள் சேவையைப் பெறலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கூகுளின் அதிகாரப்பூர்வ சேவை மையங்களாக இவை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்சல் 9 சீரிஸ் போன்களின் அடிப்படை வேரியண்டாக பிக்சல் 9 மாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் மூன்று மாடல்களிலும் இடம்பெற்றுள்ளது. 7 வருட இயங்குதளம் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 14 முதல் பயனர்கள் இந்த போன்களை முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம்.
பிக்சல் 9 – சிறப்பு அம்சங்கள்
6.3 இன்ச் OLED டிஸ்ப்ளே
டென்சர் ஜி4 சிப்செட்
50+48 மெகாபிக்சல் பின்புற கேமரா
இதில் 10.5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது
12 ஜிபி ரேம்
256 ஜிபி சேமிப்பு
4,700mAh பேட்டரி
45 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு
இந்த போன் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது
இதன் விலை ரூ.79,999
பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எஸ் மாடல்கள் டிஸ்பிளே, கேமரா, சேமிப்பு திறன் போன்றவற்றில் வேறுபடுகின்றன. இதன் விலை ரூ. 1,09,999 முதல் ரூ.1,24,999 ஆகும்.