மாலத்தீவு: சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவரும் வினோதமான (GLOWING SEA) ஒளிரும் கடல் பற்றி தெரியுங்களா.
கடல்கள் பொதுவாக நீல நிறத்திலும், கடல் நீர் உப்பு சுவையுடனும், தெளிவானதாகவும் கடல் கரைகளில் உள்ள மணல் லேசான தங்க நிறத்திலும் தான் காணப்படும். ஆனால் இந்த உலகில் உள்ள சில கடல்கள் இவற்றிலிருந்து மாறுபட்டதாகவும், வித்தியாசமான தோற்றத்திலும், ஆச்சரியப்படத்தக்கதாகவும் உள்ளது. வினோதமான GLOWING SEA (ஒளிரும் கடல்) பற்றி தெரிந்து கொள்வோம்.
இரவில் விண்மீன் நிறைந்த வானம் எவ்வளவு அழகாக இருக்குமோ அப்படி ஒரு அழகிய தோற்றத்தை தருகிறது மாலத்தீவிலுள்ள நாப்தாலுகா ஸ்கிண்டிலேன்ஸ் எனும் ஒளிரும் கடற்கரை. இங்கு இரவில் வானில் மின்னும் நட்சத்திரம் போன்று கடற்கரையும் நீல நிறத்தில் ஒளிவீசுவது கண்கவர் காட்சியாக இருக்கின்றது.
இந்த அழகான அதிசய நிகழ்விற்கு காரணம் இந்த கடலில் கோடி கணக்கில் காணப்படும் பைட்டோபிளாங்க்டோன் எனும் கடல்வாழ் மிதக்கும் உயிரினம் ஆகும். பொதுவாக இந்த உயிரினங்கள் கண்ணுக்கு தெரியாத நிலையில் தான் இருக்கும்.
ஆனால் இது கடல் அலையினாலும், தொடுவதினாலும் இதற்கு தொந்தரவு ஏற்படும் போது இது அழகிய நீல நிறத்தில் ஒளிர்கிறது. இந்த அதிசய நிகழ்வு சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கின்றது.