சென்னை: அரிசி விலை மூட்டைக்கு ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது என்று வணிகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரிசி விலை கிலோவுக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள், வணிகர்கள் சங்கத்தினர் நேற்று அறிவித்து இருந்தனர். இதையடுத்து 25 கிலோ மூட்டை அரிசி ரூ.50 குறைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், இன்று மூட்டைக்கு ரூ.100 குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1,250க்கு விற்கப்பட்ட 25 கிலோ மூட்டை அரிசி ரூ.1,150ஆக குறைந்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.