மும்பை: தொடர்ந்து 6-ம் நாளாக ஜெட் வேகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி பங்குசந்தை உயர்வை சந்தித்துள்ளன.
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.
இன்றைய நாள் முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்து 77,984.38 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 307.95 புள்ளிகள் உயர்ந்து 23,658.95 புள்ளிகளில் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 42 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் சென்செக்ஸ் 1.4 சதவீதமும் நிஃப்டி 1.32 சதவீதமும் உயர்ந்து வர்த்தகம் ஆனது.