By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 2 இந்திய அமெரிக்கர்கள் போட்டி
    1 Min Read
    உக்ரைன் தலைநகரில் ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல்
    1 Min Read
    ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    18 வயதில் பேராசிரியர்! உலகின் இளம் பேராசிரியர் என்ற கின்னஸ் சாதனை படைத்த நாதன் தாமஸ்
    1 Min Read
    இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின் உடல்கள் மீட்பு! காசாவில் கூட்டு இறுதிச்சடங்கு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மகாராஷ்டிராவில் ‘அனலாக் பன்னீர்’ விற்பனைக்கு தடை!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
    1 Min Read
    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
    விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ரூ.7,432 கோடி
    1 Min Read
    டாஸ்மாக் கடைகளில் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது கட்டாயம்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    1 Min Read
    தமிழக நிதிநிலையை சீரமைக்க குறைந்தது 2 ஆண்டுகள் தேவை! நிதித்துறை செயலர் தகவல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வார விடுமுறையை உற்சாகமாக போக்க ஏற்ற இடம் போர்டி கடற்கரை!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > Uncategorized > வார விடுமுறையை உற்சாகமாக போக்க ஏற்ற இடம் போர்டி கடற்கரை!
Uncategorized

வார விடுமுறையை உற்சாகமாக போக்க ஏற்ற இடம் போர்டி கடற்கரை!

Nagaraj
Last updated: August 6, 2026 6:23 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தானே: மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கடற்கரைக்கிராமம் போர்டி. சுத்தமான கடற்கரை இயற்கை எழில் மிகுந்து காணப்படுகிறது. இங்கு மணல் தனது உண்மையான நிறத்தையும் தன்மையையும் கொண்டிருப்பதைக் காணலாம். கறுப்பு நிறத்தில் பிசுபிசுப்பு தன்மையுடன் மணல் இங்கு காணப்படுகிறது.

சப்போட்டா மரங்கள் கடற்கரையை ஒட்டியே வரிசையாக அமைந்திருப்பது இப்பகுதிக்கு மேலும் அழகு சேர்க்கிறது. ஒரு முக்கிய அம்சமாக இந்த கடற்கரையில் கடலின் ஆழம் இடுப்பளவு வரை மட்டுமே இருப்பதால் நீரில் நீச்சல் அடிக்கவும் விளையாடவும் ஏற்ற விதத்தில் உள்ளது. மும்பை பெருநகரத்திலிருந்து 153 கி.மீ தூரத்திலேயே இந்த போர்டி கடற்கரை அமைந்துள்ளது.

அதிகம் கூட்டம் இல்லாத அதிகம் அறியப்படாத இடம் என்பதால் இந்த கடற்கரை இயற்கை வனப்பு ஆர்வமுள்ள சுற்றுலாப்பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. ஒரு ஆர்வமுள்ள சுற்றுலாப்பயணி எதிர்பார்க்கும் எல்லா சுற்றுலா அம்சங்களையும் இந்த போர்டி கடற்கரை நகரம் பெற்றுள்ளது. தனக்கேயுரிய இயற்கை எழில் அம்சங்களை கொண்டிருக்கும் இந்த போர்டி கடற்கரை வெயில் காய்வதற்கும் சப்போட்டா தோப்புகளில் ரசனையுடன் காலாற நடப்பதற்கும் அல்லது உங்கள் அன்புக்குரியவருடன் அமைதியாக நேரத்தைக்கடத்துவதற்கும் மிகவும் ஏற்ற ஸ்தலமாகும்.

உல்லாச நடைபயணத்துக்கு ஏற்றதாகவும் அத்துடன் குதிரைச்சவாரி செல்வதற்கும் உகந்த இடமாக உள்ளது. போர்டி பகுதியில் பெரும்பான்மையாக கனிவான குணத்தைக்கொண்ட பார்ஸி இன மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் சிறப்பான உள்ளூர் உணவு வகைகளையும் தற்காலிக தங்கும் வசதிக்காக வீடுகளையும் பயணிகளுக்கு அளிக்கின்றனர்.

மழைக்காலம் முடிந்து குளிர்காலம் துவங்க ஆரம்பிக்கும் சமயத்தில் இங்கு செல்வது சுற்றுலாவுக்கு உகந்ததாக உள்ளது. நவம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை உள்ள இடைப்பட்ட காலம் மிதமான சீதொஷ்ண நிலையுடன், இனிமையான சுற்றுப்புற சூழலுடன் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 12C வரை குறைந்து காணப்படுகிறது.

பெருநகரமான மும்பைக்கு மிக அருகிலேயே அமைந்திருப்பதால் போர்டி கடற்கரையானது விமானம், ரயில், சாலை போன்ற எல்லா போக்குவரத்து மார்க்கங்களின் மூலமாகவும் எளிதில் சென்றடையும் வசதியுடன் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையமாக சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. ரயிலில் செல்வதென்றால் தஹானு ரயில் நிலையம் போர்டிக்கு அருகில் உள்ளது. சாலை மார்க்கமாக இங்கு வருவதற்கு மும்பையிலிருந்து அரசுப்போக்குவரத்து பேருந்துகளும் தனியார் சுற்றுலா பேருந்துகளும் அதிக அளவின் கிடைக்கின்றன. சுலபமான போக்குவரத்து வசதிகள் மற்றும் கவர்ந்திழுக்கும் இயற்கை எழில் அம்சங்களுடன் விளங்கும் இந்த போர்டி கடற்கரை ஸ்தலம் வார விடுமுறையை உற்சாகமாக கழிப்பதற்கேற்ற சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது.

You Might Also Like

மனசு குளிர்ந்து போகணுமா… போடிமொட்டு சுற்றுலா தலத்திற்கு வாங்க

TAGGED:bordi beachexcitementhikingTravelweekend getawaysஉற்சாகம்சுற்றுலாநடைபயணம்போர்டி கடற்கரைவார விடுமுறை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?