சென்னை: கோயில் பிரசாதம் போன்ற மணமணக்கும் புளியோதரை செய்து பாருங்கள். அசந்து விடுவீர்கள். உங்களுக்கான செய்முறை.
தேவையான பொருட்கள்:
– சாதம் – 2 கப்
– புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு
– வேர்க்கடலை – ¼ கப்
– கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
– உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
– காய்ந்த மிளகாய் – 4
– கடுகு – ½ டீஸ்பூன்
– வெந்தயம் – ¼ டீஸ்பூன்
– மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
– கறிவேப்பிலை – சிறிதளவு
– நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
– உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. புளியை வெந்நீரில் ஊறவைத்து கெட்டியான கரைசலாக எடுத்துக்கொள்ளவும்.
2. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும்.
3. மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
4. புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
5. புளிக்கரைசல் கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது அரைத்த பொடியைச் சேர்க்கவும்.
6. வேகவைத்து ஆறவைத்த சாதத்தில் இந்தக் கலவையைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும். அருமையான சுவையில் புளியோதரை ரெடி
