சென்னை; உடலுக்கு நன்மைகள் தரும் பருப்புகளை ொண்டு தயாரிக்கப்படும் அடையை எவ்வாறு செய்வது என்ற செய்முறை உங்களுக்காக.
தேவையான பொருட்கள்:
– பச்சரிசி – ½ கப்
– துவரம்பருப்பு – ¼ கப்
– கடலைப்பருப்பு – ¼ கப்
– உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
– காய்ந்த மிளகாய் – 4
– சீரகம் – ½ டீஸ்பூன்
– பெருங்காயம் – சிறிதளவு
– வெங்காயம் – 1
– கறிவேப்பிலை – சிறிதளவு
– உப்பு – தேவையான அளவு
– எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. அரிசி மற்றும் பருப்புகளைத் தனித்தனியாகக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
3. அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்க்கவும்.
4. தோசைக்கல்லைச் சூடாக்கி மாவைச் சிறிது தடிமனாக ஊற்றவும்.
5. நடுவில் சிறிய துளை செய்து சுற்றிலும் எண்ணெய் விடவும்.
6. இருபுறமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வேகவைத்து எடுக்கவும்.
சமையல் ரகசியம்: மாவை மிகவும் நைசாக அரைக்க வேண்டாம். கொரகொரப்பாக அரைத்தால்தான் அடை மொறுமொறுப்பாக வரும். வெல்லம், வெண்ணெய் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.
