சென்னை: அருமையான சுவையில் நெய் மணக்கும் ரவை கேசரி செய்ோம் வாங்க.
தேவையான பொருட்கள்:
– ரவை – 1 கப்
– சர்க்கரை – 1½ கப்
– தண்ணீர் – 2½ கப்
– நெய் – 4 டேபிள்ஸ்பூன்
– முந்திரி – 10
– திராட்சை – 1 டேபிள்ஸ்பூன்
– ஏலக்காய்த்தூள் – ¼ டீஸ்பூன்
– கேசரி பவுடர் – சிறிதளவு
செய்முறை:
1. கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.
2. அதே கடாயில் ரவையைச் சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.
3. வேறு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து கேசரி பவுடர் சேர்க்கவும்.
4. கொதிக்கும் தண்ணீரில் வறுத்த ரவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
5. ரவை வெந்ததும் சர்க்கரையைச் சேர்க்கவும்.
6. சர்க்கரை கரைந்து கலவை கெட்டியாகும்போது மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
7. வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து இறக்கவும்.
சமையல் ரகசியம்: ரவையை நன்றாக வறுப்பதும், கொதிக்கும் தண்ணீரில் மெதுவாகச் சேர்ப்பதும் கட்டிகள் இல்லாத கேசரி கிடைக்க உதவும்.
