சென்னை: காரசார தக்காளி சாதத்தை வீட்டில் விரைவாக செய்ய எளிமையான செய்முறை உங்களுக்காக.
தேவையான பொருட்கள்:
– வடித்த சாதம் – 2 கப்
– தக்காளி – 3
– பெரிய வெங்காயம் – 1
– பச்சை மிளகாய் – 2
– இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
– மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
– மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
– கரம் மசாலா – ¼ டீஸ்பூன்
– கடுகு – ½ டீஸ்பூன்
– சீரகம் – ½ டீஸ்பூன்
– எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
– உப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
2. நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
4. நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.
5. மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறவும்.
6. மசாலா கெட்டியாகியதும் வடித்த சாதத்தைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
7. கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சாதம் குழையாமல் இருக்க முந்தைய நாள் வடித்த சாதத்தைப் பயன்படுத்தலாம். வெங்காய வடகம் அல்லது அப்பளத்துடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.
